வைத்தீஸ்வரன் கோவில் நாடி ஜோதிடர் கணிப்பு : இந்த முறை முதல்வர் நாற்காலியில் அமரபோவது இவர் தான்..!
நாடி ஜோதிடம் என்பது வெறும் ஒரு கணிப்பு முறை மட்டுமல்ல, அது ஒரு வரலாற்றுப் பொக்கிஷமாகவும் பார்க்கப்படுகிறது.
ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்து நிகழ்வுகளையும், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பனை ஓலைகளில் எழுதி வைக்கப்பட்டிருக்கும் இந்த முறை, இன்றும் உலகெங்கிலும் உள்ள மக்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. சாதாரண ஜோதிட முறைகள் ஒருவரின் பிறந்த நேரம் மற்றும் கிரக நிலைகளை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படும் நிலையில், நாடி ஜோதிடம் என்பது முற்றிலும் ஒருவரின் பெருவிரல் ரேகையை (Thumb Impression) மட்டுமே அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. இந்த ஓலைச்சுவடிகள் அனைத்தும் அகத்தியர் உள்ளிட்ட மகா முனிவர்களால் அருளப்பட்டதாகக் கருதப்படுகிறது. மனித குலத்தின் மீது கொண்ட கருணையால், எதிர்காலத் தலைமுறையினர் தங்கள் இன்னல்களை நீக்கிக்கொள்ள இந்த ரகசிய வித்தையை அவர்கள் வழங்கிச் சென்றுள்ளனர் என்பது நம்பிக்கையாக உள்ளது.
நாடி ஜோதிடத்தின் அடிப்படைத் தத்துவமே 'வினைப்பயன்' என்பதாகும். ஒரு நபர் தற்போது அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் அனைத்தும் அவரது முற்பிறவிச் செயல்களின் விளைவே என்று இது விளக்குகிறது. இதைக் கண்டறிய ஒருவரின் பெருவிரல் ரேகை பெறப்பட்டு, அதில் உள்ள நுணுக்கமான ரேகைக் கோடுகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது. ஆண்களுக்கு வலது கை பெருவிரல் ரேகையும், பெண்களுக்கு இடது கை பெருவிரல் ரேகையும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ரேகைகள் நூற்றுக்கணக்கான வகைகளாகப் பிரிக்கப்பட்டு, அதற்குரிய கட்டுகள் அடங்கிய ஓலைச்சுவடிகள் தேடப்படுகின்றன. ஒரு நபருக்கான சரியான ஓலை கண்டறியப்படும் வரை, அந்த நபரிடம் சில கேள்விகள் கேட்கப்படுகின்றன. அந்தத் தகவல்கள் ஓலையில் உள்ள விவரங்களுடன் சரியாகப் பொருந்தினால் மட்டுமே அது அந்த நபருடைய ஜாதகம் என்பது உறுதி செய்யப்படுகிறது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அந்த ஓலையில் சம்பந்தப்பட்ட நபரின் பெயர், பெற்றோரின் பெயர் மற்றும் தற்போது அவர் எதிர்கொள்ளும் சிக்கல்கள் அனைத்தும் துல்லியமாகக் குறிப்பிடப்பட்டிருக்கும்.
முற்காலத்தில் சோழ மன்னர்கள் இந்த ஓலைச்சுவடிகளைத் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் பாதுகாத்துப் பராமரித்து வந்ததாகக் குறிப்புகள் உள்ளன. பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், பல அரிய ஓலைச்சுவடிகள் அழிக்கப்பட்டாலும், ஒரு சில குடும்பங்கள் இவற்றைத் தலைமுறை தலைமுறையாகப் பாதுகாத்து வருகின்றனர். குறிப்பாகத் தமிழ்நாட்டின் வைத்தீஸ்வரன் கோவில் பகுதி நாடி ஜோதிடத்திற்கு உலகப் புகழ்பெற்ற மையமாகத் திகழ்கிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பல்வேறு மாநிலத்தவர், பல்வேறு நாடுகளில் இருந்தும் நாடி ஜோதிடம் பார்க்க வருகின்றனர். இதற்காக, இங்கு பல நாடி ஜோதிட நிலையங்கள் உள்ளன. மகா சிவ நாடி ஜோதிடம், அகத்தியர் நாடி, பிருகு நாடி உள்ளிட்ட பல்வேறு சித்தர்களின் நாடிகள் ஓலைச்சுவடி வடிவில் ஜோதிடம் கூறப்படுகிறது. தொழில், மன வாழ்க்கை, ஆரோக்கியம், எதிர்காலம் இவை பற்றி ஓலைச்சுவடிகள் சித்தர்களின் பாடல் வடிவில் நாடி ஜோதிடம் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு, யார் முதல்வராக வருவார் என்பது குறித்து மகா சிவ நாடி ஜோதிடம் பார்க்கப்பட்டது. ஓலைச்சுவடியில் பாடல் வடிவில் சிவனின் இளைய மகன் பெயர் கொண்ட நபர் நல்லவர்கள் துணையுடன் மீண்டும் முதல்வராக பதவி ஏற்பார் என்று ஆருட காண்டம் நாடி ஜோதிடத்தில் ஓலைச்சுவடி வந்துள்ளது. இதுகுறித்து மகா சிவ நாடி ஜோதிடர் சிவசாமி கூறுகையில், ''2021ம் ஆண்டு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்பார் என்று நாடியில் வந்தது. 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்பார் என நாடி ஜோதிடம் பார்க்கப்பட்டது. தற்போது சிவனின் இளைய மகன் என முருகன் பெயர் கொண்டவர் மீண்டும் முதல்வராக பதவி ஏற்பார் என நாடியில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும், இதன் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணி உதவியுடன் பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்க வாய்ப்பு உள்ளது,'' என, தெரிவித்தார்.