வைஷ்ணவி செய்த செயலால் கொந்தளிக்கும் தவெக படை..!
விஜய் குறித்து தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி வரும் வைஷ்ணவியின் இந்த செயல், விஜய் ரசிகர்களிடையே கடும் கோபத்தை உண்டாக்கியுள்ளது. இதை தொடர்ந்து, தவெக தொண்டர்கள் 'எல்லை மீறிச் செல்கிறீர்கள்' என வைஷ்ணவிக்கு எதிராக இணையதளங்களில் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். போகி பண்டிகையான நேற்று தவெகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த வைஷ்ணவி, தவெக தலைவர் விஜய்யின் புகைப்படம் பொறித்த டி-ஷர்ட்டை எரித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
பொங்கலுக்கு முந்தைய நாளான போகி பண்டிகை நேற்று வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதன் அடிப்படையில் மக்கள் போகி பண்டிகையை கொண்டாடினர். பொங்கலுக்கு வீடுகளை சுத்தப்படுத்தும்போது கிடைக்கும் பழைய பொருட்களை எல்லாம் எரித்து போகி பண்டிகை கொண்டாடப்பட வேண்டும் என காலப்போக்கில் மாறி விட்டது. அப்படியாக தமிழ்நாடு முழுவதும் அதிகாலையிலேயே மக்கள் பழைய பொருட்களை எரித்து போகி கொண்டாடினர்.இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காற்று மாசுபாடு ஏற்பட்டது.
இந்த நிலையில் திமுக நிர்வாகி வைஷ்ணவி விஜய் படம் போட்ட டி ஷர்ட்டை எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆரம்பத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்த வைஷ்ணவி 2025ம் ஆண்டு மே மாதம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அதுமட்டுமல்லாமல் அன்று முதல் தமிழக வெற்றிக் கழகத்தை கடுமையாக சாடி வருகிறார். இதற்கு தவெக தொண்டர்கள் கடுமையாக பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தான் பழையதை எரிப்பது போகி என்ற கேப்ஷனில் விஜய் டி-ஷர்டை போட்டு எரித்துள்ளார்.