"கூட்டணியில் இருந்து கொண்டே தினம் ஒரு பேட்டி ஏன்?"- வைகோ
தவெக கூட்டணயில் இருந்து கொண்டு அரசின் குறைகளை பற்றி நாள்தோறும் பேட்டி கொடுத்து, பொது வெளியில் பேசுவது சரியல்ல என மதிமுக பொது செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
மேட்டுப்பாளையம் பகுதிகளில் சீமை கருவேல மரங்களை அகற்றும் நிகழ்ச்சிக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பேசிய வைகோ “தற்போது தவெக கூட்டணியில் இருக்கேன். நடப்பது ஏதாச்சும் சரியில்லை என்றால் அமைச்சர்களுக்கு போன் பண்ணி சொல்வேன், ஏன் முதல்வருக்கே கூட போன் பண்ணி சொல்வேன். ரோட்டுல வந்து விமர்சனம் பண்ணமாட்டேன். தவெக கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கு ஒன்று சொல்கிறேன். உங்களுக்கு குறை சொல்ல வேண்டும் என்றால் நேராக அமைச்சர்களிடம் சென்று சொல்லுங்கள். முதலமைச்சரை பார்த்து சொல்லுங்கள். கூட்டணியில் இருந்து கொண்டே தினம் ஒரு பேட்டி ஏன்? ஆட்சியை ஆதரிக்கிறேன் என்று சொல்லிவிட்டு பொதுவெளியில் விமர்சனம் ஏன்?” எனக் கேள்வி எழுப்பினார்.