×

விவசாயிகளுக்கு விரோதமான அரசு மோடி அரசு- வைகோ

இலங்கை தமிழ் அகதிகள் முகாமை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து இருப்பதை வரவேற்பதாக மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மின்வாரிய மறுமலர்ச்சி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க மாநில செயற்குழு கூட்டம் மதிமுக பொது செயலாளர் வைகோ தலைமையில் சென்னை எழும்பூர் உள்ள தாயகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொது செயலாளர் வைகோ, “2019 இல் தேர்வு செய்யப்பட்டு விடுபட்ட 5336 கேங்மேன் பணியாளர்களுக்கு
 

இலங்கை தமிழ் அகதிகள் முகாமை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து இருப்பதை வரவேற்பதாக மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மின்வாரிய மறுமலர்ச்சி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க மாநில செயற்குழு கூட்டம் மதிமுக பொது செயலாளர் வைகோ தலைமையில் சென்னை எழும்பூர் உள்ள தாயகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொது செயலாளர் வைகோ, “2019 இல் தேர்வு செய்யப்பட்டு விடுபட்ட 5336 கேங்மேன் பணியாளர்களுக்கு நிரந்தர பணி ஆணை வழங்க வேண்டும். ஒப்பந்த பணியாளர்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும், சொந்த மாவட்டங்களில் பணியாற்ற வழிவகை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை இந்த ஆலோசனை கூட்டத்தில் வைக்கப்பட்டு உள்ளது. இது வெற்றி பெற பாடுபடுவோம்.

இலங்கை தமிழ் அகதிகள் முகாமை இலங்கை தமிழர் மறுவாழ்வு மையம் என முதலமைச்சர் அறிவித்து இருப்பதை வரவேற்கிறேன். ஐ.சி.எப் தனியார்மயம் ஆக்கப்படுவதை தடுக்க இரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தினோம். அப்போது ஒரு போதும் இரயில்வே தனியார் மயமாகாது என இரயில்வே அமைச்சர் தெரிவித்தார். அதிக லாபம் ஈட்டும் பொதுத்துறையாக இரயில்வே உள்ளதாகவும், இரயில்வேவை ஒருபோதும் அரசு தனியார் மயமாக்கது என நம்பிக்கையோடு இருக்கிறோம். விவசாயிகளுக்கு விரோதமான அரசு மோடி அரசு” எனக் குற்றஞ்சாட்டினார்.