×

“எதிர்க்கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெறுவது ஒரு ஆரோக்கியமான அரசியல் கலாசாரம்”- வைகோ

 

தமிழக முதல்வராகப் பதவியேற்றுள்ள த.வெ.க தலைவர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெறுவது ஒரு ஆரோக்கியமான அரசியல் கலாசாரம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தான் முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு நேற்று சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி வீரமணியை சந்தித்து வாழ்த்து பெற்றார் மேலும் பெரியார் நினைவினத்தில் அவர் மரியாதை செலுத்தினார் தொடர்ந்து இன்று முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றது இதனை தொடர்ந்து முதலமைச்சர் ஜோசப் விஜய் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இல்லத்தில் நேரடியாக சென்று அவரிடம் வாழ்த்துக்களை பெற்றார் தொடர்ந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் சென்று வாழ்த்து பெற்றார் அவரை மதிமுக முதன்மைச் செயலாளர் துறை வைகோ வாசல் வரை வந்து வரவேற்றார் தொடர்ந்து 10 நமிடம் நடைபெற்ற சந்திப்பு நிறைவடைந்த பிறகு மதிமுக பொது செயலாளர் வைகோ வாசல் வரை வந்து முதலமைச்சர் ஜோசப் விதையை வெளிய அனுப்பி வைத்தார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வைகோ கூறுகையில், 1967-ல் அறிஞர் அண்ணா அவர்கள் வெற்றி பெற்றவுடன் எதிர்க்கட்சித் தலைவர்களின் இல்லங்களுக்குச் சென்று வாழ்த்துப் பெற்றார். அந்தப் பண்பட்ட அரசியல் நடைமுறையை இன்று தம்பி விஜய் நினைவூட்டியுள்ளார். இது தமிழக அரசியலில் ஒரு ஆரோக்கியமான சமிக்கையாகும்.  கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை விமான நிலையத்தில் நான் அமர்ந்திருந்தபோது, விஜய் ஓடி வந்து என்னிடம் காட்டிய மரியாதை இன்றும் என் நெஞ்சில் பசுமையாக உள்ளது. அதனை அவரிடமும் இன்று நினைவூட்டினேன். அதற்கு அவர், "நான் உங்கள் பேச்சின் பரம ரசிகன்; விக்ரவாண்டி மாநாட்டிற்குச் செல்லும் முன்புகூட உங்கள் பேச்சைத் திரும்பத் திரும்பக் கேட்டேன்" முதலமைச்சர் கூறியதாக தெரிவித்தார்.

தமிழக முதல்வராகப் பதவியேற்றவுடன், 500 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட மூன்று முக்கியக் கோப்புகளில் விஜய் கையெழுத்திட்டிருப்பதை வரவேற்பதாக குறிப்பிட்ட அவர் இவை அனைத்தும் மக்கள் நலன் சார்ந்த நல்ல அறிவிப்புகள் என்றார். தேர்தல் பிரச்சாரக் காலத்திலேயே மதச்சார்பின்மை, சமூக நீதி மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பேன் என்று அவர் உறுதி அளித்திருந்தார். அதே நிலைப்பாட்டை இப்போதும் அவர் தொடர்ந்து கடைப்பிடிப்பார் என்று நம்புகிறேன் எனக் கூறினார். இந்தத் தேர்தல் முடிவு என்பது மக்கள் மாற்றத்தை விரும்பியதன் அடையாளம். நான் ஏற்கனவே கணித்திருந்தது போல, தேர்தல் முடிவுகளில் வியக்கத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. விஜய் ஒரு மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளார்.நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும், அதன் பின்னரே தேசிய கீதம் ஒலிக்க வேண்டும் என்பது எங்களின் நீண்ட கால நிலைப்பாடு. இந்த நடைமுறை மாற்றப்பட வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை என்றார். அதிமுக திமுக கூட்டணி என்ற செய்திகள் தன்னை அதிர்ச்சி அளிக்கத்தக்கதாக இருந்ததாக தெரிவித்த அவர் , தமிழ்நாட்டில் அரசியலில் இருந்து பாஜக தூக்கி எறியப்பட்டு விட்டதாக அவர் கூறினார் மேலும் தான் விஜய்க்கு எந்த ஆலோசனையும் கூறவில்லை என்றும் அவருக்கு எந்த ஆலோசனையும் தேவைப்படாது என்றார் மேலும் அவர் ஏதேனும் தன்னிடம் ஆலோசனை கேட்டால் நிச்சயம் அவருக்கு யோசனை வழங்குவேன் என கூறினார்.