“திமுக ஆட்சியில் ஊழல் கொடி கட்டி பறந்தது! திமுக எங்களை பிளாக்மெயில் செய்தது”- வைகோ பரபரப்பு பேட்டி
எங்களை பிளாக்மெயில் செய்து உதயசூரியன் சின்னத்தில் திமுக போட்டியிட வைத்ததாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “திமுக ஆட்சியில் ஊழல் கொடிகட்டி பறந்தது. அதை தற்போது விஜய் இல்லாமல் ஆக்கியுள்ளார். திமுக கூட்டணியில் இருந்தபோது ஏன் இதை பேசவில்லை என்று கேட்கிறார்கள். அப்போது பேசியிருந்தால் மறுநாளே கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்டிருப்போம். மற்ற கூட்டணிக்கு சென்றிருந்தால் அதையும் விமர்சித்திருப்பார்கள். விலகி சென்ற எம்.எல்.ஏக்கள்ல் செல்வன், ராஜேந்திரன் எங்கிருந்தாலும் வாழ்க. அவர்கள் என் முதுகில் குத்தவில்லை, நெஞ்சில் குத்திவிட்டார்கள். விலகி சென்றவர்களை விமர்சிப்பது என் வழக்கம் அல்ல, உயிரைக் கொடுக்கும் தொண்டர்கள் கட்சியை காப்பாற்றுவர்கள். இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடாது. தவெக அரசுக்கு முழு ஆதரவு அளிக்கும்.
திமுக எங்களை பிளாக்மெயில் செய்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைத்தது. ஆனால் இன்று குதிரை பேரம் பற்றி திமுக பேசுகிறது. அதனை ஆரம்பித்ததே திமுகதான். எங்கள் கட்சியை சேர்ந்த ராமகிருஷ்ணனை ராஜினாமா செய்ய வைத்து 4வது நாளே திமுகவில் சேர்த்தனர்.