×

மு.க.ஸ்டாலினுடன் சீமான், வைகோ கலகல பேச்சு

 

புதுச்சேரி அடுத்த பட்டானூரில் நடைபெற்ற இயக்குனர் கவுதமன் இல்ல திருமண வரவேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின், சீமான் மற்றும் வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.

புதுச்சேரி அடுத்த விழுப்புரம் மாவட்டம் பட்டானூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திரைப்பட இயக்குனர் கௌதமன் இல்ல நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் முதல்வரிசை சோபாவில்  மு.க.ஸ்டாலின், சீமான், வைகோ ஆகியோர் அருகே அருகே அமர்ந்திருந்தனர். ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக்கொண்டனர்.