×

4 மீனவர்களை கொன்ற இலங்கை அரசை கண்டித்து வைகோ ஆர்ப்பாட்டம்!

இலங்கை அரசை கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறார். கடந்த ஜனவரி 18ஆம் தேதி, கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தங்கச்சிமடம் மெசியா, நாகராஜ், உச்சிப்புளி செந்தில்குமார், மண்டபம் சாம் ஆகிய 4 மீனவர்கள் சென்ற படகு மீது, ரோந்து பணியில் இருந்த இலங்கை கடற்படையினர் வேகமாக மோதினர். இதில் நிலைதடுமாறி நடுக்கடலில் மீனவர்கள் 4 பேரும் விழுந்து மூழ்கி இறந்தனர். இவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை முடிந்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு
 

இலங்கை அரசை கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்.

கடந்த ஜனவரி 18ஆம் தேதி, கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தங்கச்சிமடம் மெசியா, நாகராஜ், உச்சிப்புளி செந்தில்குமார், மண்டபம் சாம் ஆகிய 4 மீனவர்கள் சென்ற படகு மீது, ரோந்து பணியில் இருந்த இலங்கை கடற்படையினர் வேகமாக மோதினர். இதில் நிலைதடுமாறி நடுக்கடலில் மீனவர்கள் 4 பேரும் விழுந்து மூழ்கி இறந்தனர். இவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை முடிந்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்திற்கு வந்தது. இவர்களின் உடல்களை பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர். அத்துடன் இலங்கை கடற்படையினரின் இந்த வெறிச்செயலுக்கு பலரும் கண்டனமும் தெரிவித்தனர்.

இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இலங்கை அரசை கண்டித்து கண்டித்து இன்று சென்னை வள்ளுவர் கோட்டம் முன் போராட்டம் நடத்துகிறார். 4 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கொன்றதாக குற்றம் சாட்டி காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இலங்கை அரசின் நடவடிக்கையை மத்திய பாஜக அரசு ஊக்குவித்து வருவதாகவும் வைகோ குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.