திமுகவின் சரிவு காலம் ஆரம்பம் - அதிரடியாய் பேசிய வைகோ
Nov 29, 2026, 13:46 IST
திமுகவுக்கு சரிவு காலம் தொடங்கி விட்டது.. அவர்களாகவே ஒரு பள்ளத்தை தோண்டி அதில் விழுந்து விட்டனர் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக தனக்குத்தானே பள்ளம் தோண்டி, அதில் தானே விழுந்துள்ளது. திமுகவிற்குப் பெரும் சரிவு காலம் தொடங்கிவிட்டது. யார் யாரை பார்த்தால் என்ன வரும்? வரும் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெல்லும். திருப்பரங்குன்ற
விவகாரத்தில் தீபத்தூணில் தீப சுடர் ஏற்றியது மிகுந்த வேதனையையும், ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் தருகிறது. இந்துத்துவா சக்திகள் கும்பாளமிடுகின்றன" என்றார்.