“அதிமுகவில் ஈபிஎஸ் இருக்க வேண்டிய இடத்திற்கு வரவேண்டியவர் நயினார் நாகேந்திரன்” - வைகோ
முதலமைச்சர் விஜய்யை ஜெயிக்க வைக்க தெரு தெருவாக, ஊர் ஊராக வைகோ வருவான் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, "முதலமைச்சர் விஜய்யை ஜெயிக்க வைக்க தெரு தெருவாக, ஊர் ஊராக வைகோ வருவான். வரப்போகும் இடைத்தேர்தலில் தவெக ஜெயிக்கும் . விஜய் நிறுத்தும் வேட்பாளர்கள் ஜெயிப்பார்கள். வைகோவும், மதிமுகவும் விஜய் உடன் இருக்கிறது. திமுகவினருக்கு கோவில்களில் போடாத அரோகராவா இந்த ஆட்சியில் போடுகிறார்கள். திருச்செந்தூரில் முதல்வர் விஜய்யை வாழ்த்தி பக்தர்கள் அரோகரா போட்டு இருக்கிறார்கள். அதில் என்ன தவறு உள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வளர்ப்பு மகன் திருமணத்தில் நகை, பட்டு, ஆபரணம் அணிந்தார்கள் என குற்றம் சுமத்தினார்கள். ஆனால் இப்போது முன்னாள் முதல்வர் ஸ்டாலின் சூப்பர் ஸ்டார் ரஜினி குடும்பத்தினர் கிரீஸ் நாட்டில் ஆடம்பரமாகக் கல்யாணம் நடத்தியது குறித்து யாரும் விமர்சனம் செய்ய முன் வரவில்லை. அதிமுகவின் முதன்மை தலைவர்களில் ஒருவராக இருந்தவர் நயினார் நாகேந்திரன். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி இருக்கும் இடத்திற்கு வரவேண்டியவர் நயினார் நாகேந்திரன். ஜெயலலிதாவிற்கு 50 லட்சம் ரூபாய் மதிப்பில் மாளிகை கட்டிக் கொடுத்தவர். ஆனால் அவரைப் பற்றி தவறான தகவல்களை ஜெயலலிதாவிடம் கூறி அவரது வீட்டிற்கு வரவிடாமல் செய்துவிட்டனர். அதிமுகவின் உயர்ந்த இடத்திற்கு வரவேண்டிய நயினார் நாகேந்திரன் தற்போது பாஜகவின் முக்கிய பொறுப்புக்கு சென்றுள்ளார். அவர் மத்திய அமைச்சர் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு வர வேண்டும்” என்றார்.