☰
×

“தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெறும் கொலைக்கு தவெக அரசு பொறுப்பாகாது”- வைகோ

 

தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெறும் கொலைக்கு தவெக அரசு பொறுப்பாகாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “ஸ்டாலின் முதல்வராக இருந்த போதும் தமிழ்நாட்டில் இது போன்று கொலைகள் நடந்துள்ளது. பல ஆண்டுகளாக இந்த கொலை சம்பவங்கள் நடந்து வருகிறது. திடீரென இச்சம்பவங்கள் நடைபெறவில்லை. தமிழகத்தின் நடைபெற்று வரும் கொலை சம்பவங்களை தடுக்கும் விதமாக முதல்வர் விஜய் காவல்துறைக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்த வண்ணம் உள்ளார். மேலும் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் கொலைக்கு தவெக அரசு பொறுப்பாகாது. தி.மு.க ஆட்சியிலும் இப்படி தான் தினமும் கொலைகள் நடந்து கொண்டிருந்தது. மு.க.ஸ்டாலின் எதிர்கட்சியை சேர்ந்தவர் அவர் அப்படி தான் சொல்லுவார். தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் யார் வேண்டுமானாலும் மக்களை நேரில் சந்திக்கலாம் அது அவர்களின் சுதந்திரம்.” என்றார்.