×

“கூட்டணியின் பெயரிலேயே லட்சியமும் நோக்கமும்”- வைகோ

 

கூட்டணியின் பெயரிலேயே லட்சியமும் நோக்கமும் தெரிவிக்கப்பட்டுவிட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டியளித்தார்.


தவெக தோழமைக் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “த.வெ.க கூட்டணியின் பெயரை ஒருமனதாக தேர்வு செய்தோம்.. மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி என பெயரிடப்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் த.வெ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வோம்.. தோளோடு தோள் கொடுத்து வெற்றிப்பெறுவோம். மதச்சார்பின்மை, மற்றொன்று சமூகநீதி. இந்த இரண்டையும் இலக்காக வைத்து இந்தக் கூட்டணி இயங்கும். இது சமூகநீதியை இலக்காக கொண்ட கூட்டணி. மதச்சார்பின்னை, சமூகநீதியை இலக்காக வைத்து மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி இயங்கும். கூட்டணியின் பெயரிலேயே லட்சியமும் நோக்கமும் தெரிவிக்கப்பட்டுவிட்டது. கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்கள் மாவட்டந்தோறும் நடத்தப்படும். தமிழ்நாடு மற்றும் புதுவையில் ம.ச.வெ. கூட்டணி செயல்படும். கூட்டணி தலைமை, ஒருங்கிணைப்பாளராக முதல்வர் விஜய் செயல்படுவார்.” என்றார்.