முதல்வர் விஜய்யின் அடுத்த இலக்கு பிரதமர் பதவியா?- வைகோ பதில்
Updated: Aug 19, 2026, 19:25 IST
தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்பது விஜய் விரும்பி ஏற்றுக்கொண்டுள்ள பொறுப்பு என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “முதலமைச்சர் விஜய்யை நான் நன்கு அறிவேன். தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்பது விஜய் விரும்பி ஏற்றுக்கொண்டுள்ள பொறுப்பு. நாட்டை தாண்டி ஒரு அடி எடுத்து வைப்பதற்கு ஒருபோதும் முனையவும் மாட்டார்.விரும்பவும் மாட்டார். தமிழகத்தை தாண்டி அரசியலை நகர்த்த முதலமைச்சர் விஜய் ஒரு போதும் முனைய மாட்டார். மேகதாது விவகாரத்தில் ஒரு இம்மி அளவு கூட தமிழகத்தை முதலமைச்சர் விஜய் விட்டுக்கொடுக்க மாட்டார். கர்நாடக முதல்வரை சந்திக்கும்போது, மேகதாது குறித்து முதல்வர் விஜய் வலியுறுத்த வேண்டும். கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது ஈடு இரக்கமற்ற அக்கிரமான செயல்” என்றார்.