திருமா கூறியது தூக்கிவாரி போட்டது- வைகோ
திருமா மீது கிண்டலாக செய்த விமர்சனத்தை திரும்ப பெறுவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
தென்காசியில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “திருமாவின் கருத்திற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்ற கருத்தை திரும்ப பெறுகிறேன். திருமா எனக்கு நெருங்கிய நண்பர்தான், யாரையும் புண்படுத்த வேண்டும் என்று பேசவில்லை. குறிப்பாக திருமாவை புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சொல்லவில்லை. திருமா மீது எந்தவித மன கசப்பும் எனக்கு கிடையாது. திமுகவும், தவெகவும் ஒரே அணியில் இணைய வேண்டும் என திருமாவளவன் கூறியது எனக்கு தூக்கிவாரி போட்டது. வட துருவமும், தென் துருவமும் எப்படி ஒன்று சேர முடியும்? தவெக அமைச்சரவையில் இருந்துகொண்டு திமுகவுடன் நட்பு தொடரும் என திருமா கூறியது அதிர்ச்சியாக இருந்தது. நோபல் பரிசு என கூறியது திருமா மனதை புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். திருமா பற்றிய எனது கருத்தால் விசிக எம்பி ரவிக்குமார் எனது சங்கொலி பத்திரிக்கை நிகழ்ச்சிக்கு வர முடியாது என தெரிவித்துவிட்டார். திருமா மீது எனக்கு கோபமோ, மன கசப்போ இல்லை, அவரது வளர்ச்சிக்கு பக்க பலமாக இருப்பேன்” என்றார்