“உள்ளே பேசியதை சொல்ல மாட்டேன்” - வைகோ
Jul 1, 2026, 19:32 IST
தமிழக வெற்றி கழக தலைமையில் இணைந்த கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் முதல்வர் விஜய் பேசிய நிலையில் உள்ளே பேசியதை வெளியே சொல்ல மாட்டேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
தவெக தோழமைக் கட்சிகள் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “ஏற்கனவே காதர் மொய்தீன் சில விஷயங்களை சொல்லவும் செய்துவிட்டார். தமிழக வெற்றி கழக தலைமையில் இணைந்த கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் முதல்வர் விஜய் பேசிய நிலையில் உள்ளே பேசியதை வெளியே சொல்ல மாட்டேன். இன்னும் இரண்டே நாட்களில் எல்லாவற்றையும் சொல்லிவிடுவார் பார்த்துக் கொண்டே இருங்கள். கூட்டணி மிக வலிமையாக இருக்கிறது” என்றார்