விஜய்யின் பண்பாடு என்னை வியக்க வைத்தது- வைகோ
தனது இல்லத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் விஜயை வாசல் வரை வந்து வழியனுப்பினார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய், மரியாதை நிமித்தமாக முன்னாள் முதல்வர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்துவருகிறார். அந்தவகையில் சென்னை அண்ணாநகரில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து வாழ்த்து பெற்றார் விஜய். அப்போது வைகோ, தனது குடும்பத்தினர் மற்றும் கட்சி நிர்வாகிகளை முதல்வர் விஜய்க்கு அறிமுகம் செய்துவைத்தார். பின்னர் தனது இல்லத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் விஜயை வாசல் வரை வந்து வழியனுப்பினார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
இச்சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “உங்கள் பேச்சுக்கு நான் ரசிகன் என விஜய் கூறினார். விஜய்யின் பண்பாடு என்னை வியக்க வைத்தது. விஜய்க்கு அறிவுரை அல்ல, வாழ்த்து கூறினேன். விஜய்யின் மிக உயர்ந்த பண்பாட்டிற்கு நெஞ்சார்ந்த நன்றி. ஆச்சர்யம் நடக்கும் என நான் முன்பே கூறியிருந்தேன். மிகப்பெரிய சக்தியாக விஜய் மாறி இருக்கிறார். அவர் சமூக நீதி, மதசார்பின்மை, ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும்” என்றார்.