“தமிழகத்தில் முக்கிய சக்தியாக தவெக உருவெடுக்கும்" - வைகோ
May 1, 2026, 18:50 IST
தமிழ்நாட்டில் த.வெ.க ஒரு முக்கியமான சக்தியாக உருவெடுத்துள்ளதாக மதிமுக பொதுசெயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ANIக்கு அவர் அளித்த பேட்டியில், “தமிழ்நாட்டில் த.வெ.க ஒரு முக்கியமான சக்தியாக உருவெடுத்துள்ளது. தேர்தல் முடிவுகளில் விஜயின் த.வெ.க ஆச்சர்யங்களை ஏற்படுத்தும். த.வெ.கவுக்கு மாணவர்கள், முதல்முறை வாக்காளர்கள் ஆதரவு அதிகம் உள்ளது. தியாகத்தால் உருவானது திராவிட இயக்கம், அதை ஒருபோதும் அழிக்க முடியாது. தவெகவுக்கு இளைஞர்கள் ஆதரவு உள்ளது. தவெகவுக்கு சாதகமான வாக்கு மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒவ்வொன்றும் வேறுபடுகின்றன. அதனால் முடிவுகளை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்றார்.