×

“8 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்தவுள்ளோம்” - வைகோ

 

செம்மணி படுகொலை குறித்து தற்போது சிலர் பேசுவது வேடிக்கையாக உள்ளது.1998ல் இது குறித்து பேசி உலக அரங்கில் இந்த பிரச்சனை வெளிக்கொண்டு வந்தது நான் தான் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,“இந்தியாவில் பல்வேறு இடங்களுக்கு பிரதமர் செல்கிறார். உலக நாடுகளுக்கு இடைவிடாது சுற்றுப்பயணம் செல்கிறார். அது மாதிரி தமிழ்நாட்டுக்கு வந்துள்ளார். இதில் எந்த முக்கியத்துவமும் இல்லை. முதலமைச்சர் மருத்துவமனையில் இருந்தே வழக்கமான பணிகளை மேற்கொண்டுள்ளார். அவர் ஓய்வு எடுக்கவே இல்லை. நேற்று டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு சென்றுள்ளார். இனியும் வழக்கமான பணிகளை மேற்கொள்வார். தமிழகத்தில் எட்டு இடங்கள் தேர்வு செய்து தமிழக வாழ்வாதார பிரச்சனைகளுக்காக கடந்த காலங்களில் போராடி வெற்றி பெற்ற இடங்களில் மீண்டும் அந்த பகுதி மக்களுக்கு நினைவூட்டும் வகையில் ஆகஸ்ட் 9 முதல் இந்த கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை நினைவுப்படுத்தும் வகையில் தூத்துக்குடியி 8 இடங்களில் ஆகஸ்ட் 9 தேதி பொதுக்கூட்டம் நடத்தவுள்ளோம். செம்மணி படுகொலை குறித்து தற்போது சிலர் பேசுவது வேடிக்கையாக உள்ளது.1998ல் இது குறித்து பேசி உலக அரங்கில் இந்த பிரச்சனை வெளிக்கொண்டு வந்தது நான் தான்” என்றார்.