"உ.வே.சா.ஆற்றிய பணிகள் இவ்வையகம் இருக்கும் வரை நிலைத்து நிற்கும்" - தினகரன் ட்வீட்!!
Feb 19, 2024, 13:06 IST
தமிழறிஞர் உ.வே.சாமிநாத ஐயர் அவர்களின் பிறந்தநாளையொட்டி டிடிவி தினகரன் ட்வீட் செய்துள்ளார்.
இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், தமிழ் மொழியை உலகறியச் செய்தவரும், தமிழக மக்கள் அனைவராலும் தமிழ்த்தாத்தா என அன்போடு அழைக்கப்படுபவருமான தமிழறிஞர் உ.வே.சாமிநாத ஐயர் அவர்களின் பிறந்தநாள் இன்று.
தொல்காப்பியம் தொடங்கி சங்க இலக்கியங்கள் வரை அனைத்தையும் புதுப்பித்ததோடு, தமிழ் பணியை தனது உயிர்மூச்சாக கொண்டிருந்த தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள் தமிழ் இலக்கியத்திற்காக ஆற்றிய பணிகள் இவ்வையகம் இருக்கும் வரை நிலைத்து நிற்கும்.என்று குறிப்பிட்டுள்ளார்.