#BREAKING துருப்பிடிக்காத தரமான கத்திகளை பயன்படுத்த வேண்டும்- FSSAI அறிவுறுத்தல்
உணவுகளை வெட்டும்போது அல்லது உணவு பதப்படுத்தும் நடவடிக்கையின் போது துருப்பிடிக்காத தரமான கத்திகள் மற்றும் பிளேடுகளை பயன்படுத்த வேண்டும் என உணவு வணிக நிறுவனங்களுக்கு இந்திய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உணவுப் பாதுகாப்புத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில்,உணவுப் பதப்படுத்துதல் மற்றும் கையாளுதலின் போது துருப்பிடிக்காத பிளேடுகள்,கத்திகள் உபகரணங்களை மட்டுமே பயன்படுத்துவதை உறுதி செய்யுமாறு உணவு வணிக நிறுவனங்களுக்கு இந்திய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
பொது மக்கள் உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்களை Tamil Nadu Food Safety Department (TNFSD) வலைதளம், அல்லது மொபைல் செயலி மூலம் பதிவு செய்யலாம். மேலும், 94440 42322 என்ற தொலைபேசி எண்ணிலும், வாட்ஸ்அப் மூலம் புகார்களை அனுப்ப முடியும். இந்த வழிகாட்டுதல்கள் பண்டிகை காலங்களில் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விஷயங்களை தவிர்க்கும் நோக்கத்துடன் அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளன. மக்கள் அதிகளவில் வாங்கும் இனிப்பு மற்றும் காரசார உணவு பொருட்களின் தரத்தை மேம்படுத்தி, மக்கள் ஆரோக்கியத்தை பாதுகாத்தல் அரசின் முக்கியப்பணியாக உள்ளது.