அமைச்சர் கொடுத்த அப்டேட்..! இனி குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000-க்கு பதில் ரூ.1500..?
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால், பெண்களில் வாக்குகளை திமுக கூட்டணிக்கு முழுவதுமாக வர வேண்டும் என்ற நோக்கில், திமுக அரசு கலைஞர் மகளிர் உரிமை தொகையை உயர்த்தப் போகிறது எனத் தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்தநிலையில் தான் அமைச்சர் ஐ.பெரியசாமி, 'பொங்கல் பண்டிகை முடிவதற்குள் பெண்களுக்கு ஒரு சிறப்பு பொங்கல் பரிசு காத்திருக்கிறது எனக் கூறியிருக்கிறார்கள். அதாவது இதுக்குறித்து பெண்கள் மத்தியில் அமைச்சர் பேசும் போது, 'பொங்கல் அன்றோ அல்லது பொங்கல் முடிவதற்குள் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பெண்களுக்கு ஒரு தித்திப்பான அறிவிப்பை வெளியிடுவார். பெண்களுக்கு பொங்கல் பரிசு காத்திருக்கிறது எனத் தெரிவித்திருக்கிறார்.
அமைச்சர் ஐ.பெரியசாமி அளித்த தகவலின்படி, கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உரிமைத்தொகையை திமுக அரசு அதிகரிக்க முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. அதனால் தான் இதை பொங்கல் பரிசு என சூசகமாக அமைச்சர் குறிப்பிட்டு உள்ளார் எனக் கூறப்படுகிறது.
தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.1000 உரிமைத் தொகையை ரூ.1500 ஆகவோ அல்லது ரூ.2000 ஆகவோ உயர்த்த தமிழக அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத்தான் அமைச்சர் ஐ.பெரியசாமி பெண்களுக்கு பொங்கல் பரிசு காத்திருக்கிறது என மறைமுகமாக கூறியிருப்பதாக தகவல் தெரிவிக்கிறது.
குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உதவித்தொகை ரூபாய் உயர்த்துவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்பது பொங்கல் அல்லது வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாக வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது.