மூடப்படாத பாதாளச் சாக்கடை- ஒப்பந்ததாரருக்கு ரூ.50,000 அபராதம்
Jun 18, 2024, 14:26 IST
கோவையில் மூடப்படாத பாதாளச் சாக்கடையில் பெண் விழுந்த சம்பவத்தில் ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை தூர்வாரப்பட்டது. இருப்பினும் சில இடங்களில் பாதாள சாக்கடை மூடிகள் திறந்தபடியே காணப்பட்டன. இது குறித்து பொதுமக்களும் வணிக நிறுவன உரிமையாளர்களும் மாநகராட்சி மாநகராட்சிக்கு தகவல் அளித்துள்ளனர்.