☰
×

சென்னைப் பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளிவைப்பு

 

சென்னையில் கனமழை எச்சரிக்கையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இன்று (நவ. 2) நடைபெறவிருந்த அனைத்துத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

முரசு புயல் இன்று நள்ளிரவு ஆந்திராவின் ஓங்கோல் அருகே கரையை கடக்கிறது. இதன் தாக்கத்தால் சென்னை, செங்கல்பட்டில்  காலை 10 மணி வரை மாலை தொடரும் எனவும், சென்னை, திருவள்ளூர் கடலோர பகுதிகளுக்கு மஞ்சள்  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், கடல் சீற்றத்திற்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

இந்நிலையில்  முரசு புயல் காரணமாக சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் சென்னை பல்கலை. தேர்வுகள் தள்ளிவைகக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என சென்னை பல்கலைக்கழக பதிவாளர் அறிவிக்கப்பட்டுள்ளது.