×

மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு : கோடை வெப்பத்தை தணிக்க பாக்கெட்டில் இது இருந்தால் போதும்..!!

 

கோடை வெப்பத்தைத் தணிக்க ஒரு வினோதமான ஆலோசனையை வழங்கினார் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா.
வெப்ப அலையிலிருந்து தப்பிக்க உங்கள் பாக்கெட்டில் ஒரு வெங்காயத்தை வைத்துக்கொள்ளுங்கள். இது ஒரு பழங்கால ரகசியம், இதைச் செய்தால் உங்களுக்கு எதுவும் ஆகாது என்று அவர் கூறினார். அவர் கூறிய இந்த கருத்து தற்போது விவாதப் பொருளாக மாறி உள்ளது.


அமைச்சர் மேலும் கூறுகையில், வெப்பநிலை அதிகமான டிகிரியைத் தாண்டினாலும், நான் எனது காரில் பயணிக்கும்போது ஏசியைப் பயன்படுத்துவதில்லை. இயற்கை முறைப்படி வெப்பத்தை எதிர்கொள்வதையே நான் விரும்புகிறேன் எனத் தெரிவித்தார். நவீன வசதிகளைத் தவிர்த்து, பாரம்பரிய முறைகளைப் பின்பற்றுவதே தனது ஆரோக்கியத்தின் ரகசியம் என்பது அவரது வாதமாக இருந்தது.

அமைச்சரின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது. அறிவியல் ஆதாரம் இல்லை - பாக்கெட்டில் வெங்காயம் வைப்பதால் வெப்ப அலைகளிலிருந்து (Heat stroke) தப்பிக்க முடியும் என்பதற்கு எந்தவிதமான அறிவியல் அல்லது மருத்துவ ஆதாரமும் இல்லை என மருத்துவர்கள் மற்றும் அறிவியல் ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

ஒரு பொறுப்பான பதவியில் இருக்கும் மத்திய அமைச்சர், அறிவியல் பூர்வமற்ற கருத்துகளை மக்களிடையே பரப்பக் கூடாது எனப் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.