×

அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் 'நீட்' தேர்வு - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்..!!

 

மருத்துவப் படிப்புகளுக்கான (MBBS, BDS) நீட் தேர்வு அடுத்த ஆண்டு முதல் ஆன்லைன் முறையில் (கணினி வழி தேர்வு) நடத்தப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அதிரடியாக அறிவித்துள்ளார். தற்போது நடைமுறையில் உள்ள OMR தாள் முறையை விட, கணினி வழியிலான தேர்வு முறையே ஒப்பீட்டளவில் மிகவும் சிறந்தது மற்றும் பாதுகாப்பானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்தது தெரியவந்த உடனேயே, மாணவர்களின் நலன் கருதி தேர்வை ரத்து செய்வதே சிறந்தது என மத்திய அரசு முடிவு செய்ததாக அமைச்சர் விளக்கமளித்துள்ளார். மேலும், ஜூன் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் மறுதேர்வுக்கு மாணவர்களிடம் இருந்து எந்தவித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

மோசடி நபர்கள் மற்றும் கல்வி மாஃபியாக்களின் சதிச்செயல்களால் தகுதியான, நேர்மையான மாணவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் பாதிக்கப்பட கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. இந்த முறைகேடுகளை தடுத்து, தேர்வு முறையை முற்றிலும் தூய்மையாக்கும் நோக்கிலேயே இந்த அதிரடி சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படுவதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சுட்டிக்காட்டியுள்ளார்.