×

ஒரே நாடு... ஒரே பெட்ரோல்... E-20 பெட்ரோல் மட்டுமே விற்பனை செய்ய ஒன்றிய அரசு உத்தரவு
 

 

நாடு முழுவதும் ஏப்ரல் 1 முதல் 20% எத்தனால் கலந்த E20 பெட்ரோல் மட்டுமே எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டு ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

நாடு முழுவதும் ஏப்ரல் 1 முதல் 20% எத்தனால் கலந்த E20 பெட்ரோல் மட்டுமே எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டு ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. ஏற்கனவே பெரும்பாலான பெட்ரோல் நிலையங்களில் E20 பெட்ரோல் வழங்கப்படும் நிலையில் அதை கட்டாயமாக்கி ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள பெட்ரோல் (E5) அதிகபட்சமாக 5%-க்கு குறைவான எத்தனால் கலப்புடன் தயாரிக்கப்படுகிறது. ஆனால் இனி பயன்படுத்தப் போகும் E20 என்பது 20% எத்தனால் (Ethanol ) + 80% இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பெட்ரோல் (biofuel) கலவையாகும். 

E20 பெட்ரோல் பயன்பாடு இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் சார்பை குறைக்கவும் ,வெளிநாட்டு செலாவணியை சேமிக்கவும், விவசாயிகளுக்கு (சர்க்கரை கரும்பு, தானியங்கள்) கூடுதல் வருமானம் பெறவும் , முக்கியமாக காற்று மாசுபாட்டை குறைக்கவும் வழிவகுக்கும் எனப்படுகிறது. சுற்றுச்சூழலைப் பொறுத்தவரை, E20 பெட்ரோல் பயன்பாடு வாகனங்களிலிருந்து வெளியேறும் நச்சுப் புகையைக் குறைத்து காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தப் பெரிதும் உதவும் எனக் கூறப்படுகிறது. E20 பெட்ரோல் (20% எத்தனால் கலவை) சாதாரண பெட்ரோலை விட குறைந்த ஆற்றல் கொண்டது. இந்த பெட்ரோல் பயன்படுத்துவதால் பெரும்பாலான கார்களில் மைலேஜ் 2-6% குறையும்.