×

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் - திமுக எம்.பி. அருண் நேரு சந்திப்பு..!!

 
திமுக எம்.பி. அருண் நேரு வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,
புதுடெல்லியில், பொதுமக்களின் வாழ்கையை நேரடியாக பாதிக்கும் இரண்டு முக்கியமான விவகாரங்களை நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து முன்வைத்தேன்:
* கடன் மதிப்பீட்டு நிறுவனங்களில் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான அவசர திருத்தங்கள் — இந்தியா முழுவதும் உள்ள கடன் வாங்கும் பொதுமக்களுக்கு நியாயம், வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும்.
* PACL Ltd மோசடியில் தாங்கள் வியர்வை சிந்தி சேமித்த சேமிப்பை இழந்த ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கும், குறிப்பாக துரையூர் பெண்களுக்கும், விரைவான பணத்தீர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.