#BREAKING மத்திய அமைச்சரவை செயலாளர் டி.வி.சோமநாதனின் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு
மத்திய அமைச்சரவை செயலாளர் டி.வி. சோமநாதனின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதியுடன் அவரது பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில், அதனை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தற்போதைய அமைச்சரவைச் செயலாளரான டி.வி. சோமநாதன் ஐஏஎஸ், இந்தியாவின் மிக உயர்ந்த நிர்வாகப் பதவியான இப்பதவியில் அவர் 30 ஆகஸ்ட் 2024 முதல் பணியாற்றி வருகிறார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் (Ph.D) பெற்ற இவர், 1987ஆம் ஆண்டு பேட்ச் சேர்ந்த தமிழ்நாடு பிரிவு ஐஏஎஸ் அதிகாரி ஆவார். அமைச்சரவைச் செயலாளராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு, இந்திய அரசின் நிதிச் செயலாளராகவும் (நிதிச் செயலாளர்) மற்றும் செலவினத் துறைச் செயலாளராகவும் பணியாற்றினார். பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலாளராகவும் மற்றும் கூடுதல் செயலாளராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தமிழ்நாட்டில் சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் வணிகவரித் துறை ஆணையர் போன்ற பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.