×

தடையில்லா மின்சாரம்… மின்வாரியத்தின் சிறப்பு ஏற்பாடு!

சென்னையில் உள்ள 7 மருத்துவமனைகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் நிலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர், தமிழகத்தில் நிலவிய சூழல் மனதை உலுக்கியது. மருத்துவமனைகளின் வாசலில் ஆம்புலன்ஸ்கள் வரிசைக் கட்டி காத்திருந்ததும் நோயாளிகள் பலர் ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்த சம்பவங்களும் நெஞ்சை பதைபதைக்க வைத்தன. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆக்சிஜன் தேவையும் வென்டிலேட்டர் தேவையும் அதிகரித்தது. உயிரிழப்புகளை தடுக்க சில மருத்துவமனைகளில் தடையில்லா மின்சாரம் வழங்க
 

சென்னையில் உள்ள 7 மருத்துவமனைகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் நிலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர், தமிழகத்தில் நிலவிய சூழல் மனதை உலுக்கியது. மருத்துவமனைகளின் வாசலில் ஆம்புலன்ஸ்கள் வரிசைக் கட்டி காத்திருந்ததும் நோயாளிகள் பலர் ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்த சம்பவங்களும் நெஞ்சை பதைபதைக்க வைத்தன.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆக்சிஜன் தேவையும் வென்டிலேட்டர் தேவையும் அதிகரித்தது. உயிரிழப்புகளை தடுக்க சில மருத்துவமனைகளில் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. தற்போது பாதிப்பு குறைந்து வரும் நிலையிலும், சிகிச்சையில் இருப்போரின் நிலையை கருத்தில் கொண்டு சென்னையில் கூடுதலாக 7 மருத்துவமனைகளில் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஸ்டான்லியில் உள்ள கொரோனா தடுப்பூசி மையம், பெரியார் நகர் கொளத்தூர் அரசாங்க மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, சேப்பாக்கம் கஸ்தூரிபாய் காந்தி அரசு மருத்துவமனை, கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் மருத்துவமனை, தாம்பரம் சானடோரியம் டிபி மருத்துவமனை, சென்னை கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இரண்டு மின்வழித் தடத்திலும் தடையில்லா மின்சாரம் வழங்கவும் ஒரு மின் வழித்தடத்தில் பழுது ஏற்பட்டால் மூன்று வினாடிகளில் மற்றும் மின்தடத்தில் தானாக மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.