×

தமிழகத்தில் வேலையின்மை 2.6% ஆக குறைவு : ஊரடங்கிலும் கிராமப்புற வேலைவாய்ப்பு அதிகரித்தது எப்படி?

பொருளாதாரத்தில் வீழ்ச்சி கொரோனா பாதிப்பு காரணமாக பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் கொரோனா பாதிப்பால் மட்டுமின்றி அதற்கு முன்பே பொருளாதாரத்தில் வீழ்ச்சி இருந்ததாக பொருளாதார நிபுணர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நிலையில் பல்வேறு நாடுகளில் வேலை வாய்ப்பின்மை அதிகரித்தது. இதற்கு இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல. மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து அன்றாட தேவைக்கே அவதிப்பட்டு வந்தனர். தமிழகத்தில் வேலையின்மை ஆனால் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்ட
 

பொருளாதாரத்தில் வீழ்ச்சி

கொரோனா பாதிப்பு காரணமாக பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் கொரோனா பாதிப்பால் மட்டுமின்றி அதற்கு முன்பே பொருளாதாரத்தில் வீழ்ச்சி இருந்ததாக பொருளாதார நிபுணர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நிலையில் பல்வேறு நாடுகளில் வேலை வாய்ப்பின்மை அதிகரித்தது. இதற்கு இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல. மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து அன்றாட தேவைக்கே அவதிப்பட்டு வந்தனர்.

தமிழகத்தில் வேலையின்மை

ஆனால் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் தற்போது வேலைவாய்ப்பின்மை சதவீதம் குறைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தமிழகத்தில் வேலையின்மை விகிதம் 2.6 சதவீதமாக குறைந்துள்ளது. காரணம் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு பல்வேறு தொழில் நிறுவனங்கள் மீண்டும் வழக்கம் போல் இயங்க ஆரம்பித்துள்ளதேயாகும்.

சாகுபடிக்கான பரப்பளவு

தமிழகத்தை பொறுத்தவரை சுமார் 70 சதவீதம் பேர் விவசாயம் மற்றும் அதை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இந்த ஊரடங்கு காலத்திலும் கிராமப்புறத்தில் வேலைவாய்ப்பின்மை என்பது ஏற்படவில்லை. மாறாக அங்கு வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக ஜூலை மாதத்தை விட ஆகஸ்ட் மாதத்தில் குறைவான மக்களே வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கின்றனர் என்று கூறப்படுகிறது. 2019-2020 மற்றும் 2020-2021 காலகட்டத்திற்கு இடையில் சாகுபடிக்கான பரப்பளவு அதிகரித்துள்ளது. 2019-2020ல் 2.7 லட்சம் ஹெக்டேராக இருந்த சாகுபடி பரப்பளவு 2020-2021 காலகட்டத்தில் 12 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது.

வேலைவாய்ப்பின்மை 2.6 சதவீதமாக குறைவு

தமிழகத்தைப் பொறுத்தவரையில் மார்ச் 24ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் ஏப்ரல் மாதம் வேலைவாய்ப்பின்மை விகிதம் 49.8 சதவீதமாக இருந்தது. ஆனால் தளர்வு அளிக்கப்பட்ட பின்னர் ஜூலை மாதத்தில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 8.1 சதவீதமாக குறைந்தது. ஆனால் தற்போது செப்டம்பர் 30 வரை ஊரடங்கு அமலில் இருந்தாலும் தமிழக மக்களுக்கு ஏற்ற பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் தொழில் நிறுவனங்கள் உத்வேகத்துடன் இயங்க ஆரம்பித்த காரணத்தினால் வேலைவாய்ப்பின்மை 2.6 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த சூழல் மேலும் குறைந்து அரசுக்கும் மக்களுக்கும் சாதகமான சூழல் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பின்மை குறைவாக உள்ள மாநிலமாக தமிழகம்

குறிப்பாக இந்தியாவில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் உற்பத்தி துறையில் பொருத்தவரை பெரிய மாநிலமான குஜராத்தில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 1.9 சதவீதமாக உள்ள நிலையில் வேலைவாய்ப்பின்மை மகாராஷ்டிராவில் 6.2 சதவீதமாக உள்ளது. அந்த வகையில் குஜராத்தை அடுத்து நாட்டிலேயே வேலைவாய்ப்பின்மை குறைவாக உள்ள மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இதை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.