×

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தமிழக அரசின் உதவித் தொகை விண்ணப்பிக்கலாம்..! விண்ணப்பிப்பது எப்படி?

 

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, வேலை கிடைக்காமல் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் இளைஞர்களுக்கு பொருளதார ரீதியாக உதவிடும்வ வகையில், வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. இந்த நிலையில், வேலைவாய்ப்பு கிடைக்காமல் காத்திருக்கும் இளைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகையும், திறன் மேம்பாட்டு பயிற்சியுடன், உதவித் தொகை வழங்கி வருகிறது. இந்த பயிற்சி மூலம் விண்ணப்பதாரர்கள் எளிதாக வேலைவாய்ப்புகளை பெற முடியும்.  இந்த திட்டம் மூலம் மாதந்தோறும் மூன்று ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. 

தகுதிகள் என்னென்ன?

விண்ணப்பதாரரின் கல்வித்தகுதியை பொறுத்து, உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.  அதன்படி, 9ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு  ரூ.200, 10ஆம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்களுக்கு ரூ.200, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, 12ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு ரூ.400, டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.400, பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு ரூ.600  உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படுகிறது.  

மேலும், மாற்றுத்திறனாளிளுக்கு இந்த உதவித் தொகை மாறுபடும். அதன்படி, 9ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு ரூ.600, 10ஆம் வகுப்பு தேர்ச்சி, தோல்விக்கு ரூ.600, 12ஆம் வகுப்பு தேர்ச்சி, டிப்ளமோ படிப்பிற்கு ரூ.750, பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.1,000 என வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

விண்ணப்பதாரர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஐந்து ஆண்டுகளுக்குக் குறையாமல் தங்கள் கல்வித் தகுதியைப் பதிவு செய்திருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை, அவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒரு வருடத்திற்குக் குறையாமல் பதிவு செய்திருக்க வேண்டும். வயது வரம்பபை பொறுத்தவரை,  பொதுப்பிரிவினர் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லை. விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம்  ரூ.72,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். 

மயிலாடுதுறை, விருதுநகர் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மயிலாடுதுறை, விருதுநகர் ஆட்சியர்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.  எனவே, மயிலாடுதுறை, விருதுநுகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தினை மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி, வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பிப்ரவரி 27ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.   விண்ணப்பிக்கும்போது  வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை சேர்த்து விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.