×

#BREAKING வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 - விஜய் வாக்குறுதி

 

தமிழகத்தின் 234 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கான தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களை  அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்துவைக்கவுள்ளார். முன்னதாக தேர்தல் வாக்குறுதிகளை அவர் அறிவித்தார்.

விஜய் அறிவித்த வாக்குறுதிகள்

  • போதை பொருள் உள்வரவு தடுப்பு மற்றும் புழக்கத்திற்கான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
  • கல்விக்கு வறுமை தடையாக இருக்கக்கூடாது என்பதால் பிணையில்லா கல்விக்கடன் வழங்கப்படும்
  • இளைஞர்களின் கல்வியை உறுதி செய்ய 12ஆம் வகுப்பு முதல் பிஎச்டி வரை கல்வி பயில ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.
  • ஆண்டுதோறும் 5 லட்சம் இண்டர்ன்ஷிப் பயிற்சியை வழங்க ரூ.10,000 வரை மாநில அரசே வழங்கும்.
  • வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 வழங்கப்படும்.
  • தமிழர்களுக்கே வேலை என்பதை உறுதிச்செய்ய ‘நமது ஊரில் நமக்கே வேலைவாய்ப்பு திட்டம்’ உருவாக்கப்படும்
  • தொழில்முனைவோருக்கு ஜிஎஸ்டியில் மானியம்