யாருடைய ஆட்சியில் அம்மா உணவகம் நன்றாக செயல்பட்டது..? சட்டமன்றத்தில் நடந்த காரசார விவாதம்..!
யாருடைய ஆட்சியில் அம்மா உணவகம் நன்றாக செயல்பட்டது? - சட்டப்பேரவையில் திமுக, தவெக, அதிமுக உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம்
அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி பட்ஜெட் மீதான விவாதத்தில் பேரவையில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, “வெற்றி திட்டங்கள் என ஸ்டிக்கர்களை ஒட்டி இந்த அரசு மீண்டும் பழைய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பல்வேறு துறைகளுக்கு நிதி குறைக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறைகளுக்கு நிதி பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. மாற்றம் மாற்றம் என்று சொன்னீர்களே. அது பெயர் மாற்றம் தானா?
அம்மாவின் பசுமை இல்ல திட்டம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வெற்றி இல்ல வீடு திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. அம்மா ஆட்சியில் விலையில்லா மிதிவண்டிகள் திட்டம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு நவீன பிராண்டட் மிதிவண்டிகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அம்மா மற்றும் எடப்பாடியார் ஆட்சியில் தொடர்ந்து வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினி திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வெற்றி மடிக்கணினி திட்டம் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது” என்றார்.
அதற்கு அமைச்சர் நிர்மல் குமார், “எந்த திட்டங்களும் நிறுத்தப்படவில்லை. முதல்வர் ஆட்சிக்குப்பின் அத்திட்டங்கள் புது செயல் வடிவம் பெற்றுள்ளது. ஸ்டிக்கர் ஆட்சி யார் மூலம் உருவானது? என்று அனைவருக்கும் தெரியும். அதை பயன்படுத்த வேண்டாம் என்று பார்க்கிறேன்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய ஆதவ் அர்ஜுனா, “திமுக, அதிமுக ஆட்சிகளில் கொண்டுவரப்பட்டுள்ள நல்ல திட்டங்களை வரவேற்று, அவை அப்டேட் செய்யப்பட்டு வருகின்றன. அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு, ‘அம்மா உணவகம்’ என்று கூறி அதுபற்றி பேசினார்.
அம்மா உணவகம் தங்கள் ஆட்சியில் தான் சிறப்பாக செயல்பட்டு வருவதாக ஆதவ் அர்ஜுனா கூறிய கருத்துக்கு, திமுகவின் கே.என் நேரு, அதிமுக எஸ்.பி வேலுமணி எதிர்வினையாற்றினர்.
அவர்களைத் தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, ஆட்சி அமையும் பொழுது ஆட்சியாளர்கள் ஒரு திட்டத்தை கொண்டு வருகிறார்கள். ஆட்சி மாற்றம் வரும்பொழுது அதே பெயரில் அந்த திட்டம் செயல்பட்டால் நல்லது. அதே பெயர் தொடர்ந்தால் இந்த பிரச்சினையே வராது என்றார்.
அதற்கு அமைச்சர் செங்கோட்டையன், திமுக மற்றும் அதிமுக ஆட்சியிலும் பெயர்கள் மாற்றப்பட்டன. பெயர் மாற்றப்பட்டது உண்மை. அதை மறுக்க முடியாது. இங்கு பல பேர் அதே பெயரில் திட்டங்களை தொடர வேண்டுமென சொல்கிறார்கள்” என்று கூறி விவாதத்தை முடித்து வைத்தார்.
#JUSTNOW || சரியாக செயல்படாத அம்மா உணவகத்திற்கு உரிய நிதி ஒதுக்கி செயல்படுத்தப்படுகிறது - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
— Polimer News (@polimernews) August 7, 2026
திமுக ஆட்சியிலும் அம்மா உணவகம் செயல்பட்டது - கே.என்.நேரு
கடந்த திமுக ஆட்சியில் அம்மா உணவகத்தை சரியாக நடத்தவில்லை - வேலுமணி
கடந்த ஆட்சியின் திட்டங்களுக்கு அதே பெயர்… pic.twitter.com/mJnS0MFb1G