×

#BREAKING எ.வ.வேலு வீட்டில் கணக்கில் வராத ரூ.40 லட்சம் பறிமுதல்

 

திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியதில் முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில் வராத ரூ.40 லட்சம் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. எந்த ஒரு பணியும் மேற்கொள்ளாத சங்கரானந்த் இன்ப்ரா நிறுவனத்திற்கு ரூ.3.23 கோடி விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியதில் முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை கூறியுள்ளது.