×

பிரதமர் பாராட்டியவரின் மகளை ஏழைகளுக்கான நல்லெண்ண தூதராக அறிவித்தது ஐ.நா சபை!

ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கு பலர் உதவி வருகின்றனர். அதே போல மதுரை மேலடை பகுதியில் வசித்து வரும் மோகன் என்னும் முடிதிருத்தும் தொழில் செய்து வருபவர் தனது மகளின் கல்வி செலவுக்கு சேமித்து வைத்திருந்த ரூ.5 லட்சம் பணத்தை ஏழைகளுக்கு உதவினார். கடந்த சில நாட்களுக்கு முன்னர், மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மோகனுக்கு தனது பாராட்டுகளை தெரிவிப்பதாக குறிப்பிட்டிருந்தார். அதே போல மோகனுக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.
 
அதனையடுத்து இவர் பா.ஜ.கவில் இணைந்து விட்டதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. ஆனால் அந்த தகவல் உண்மையில்லை என்று மோகன் தெரிவித்து விட்டார். இந்நிலையில், மதுரையை சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளி மோகனின் மகளான நேத்ராவுக்கு ஐ,நா சபை சார்பில் ரூ. 1 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அவரை ஏழைகளுக்கான நல்லெண்ண தூதராக ஐ.நா சபை அறிவித்துள்ளது.