☰
×

யுஜிசி நெட், ஜேஇஇ மெயின் தேர்வு தேதிகள் மாற்றம்.. NDA அறிவிப்பு..!

 

தேசிய தேர்வுகள் முகமை, 2026 டிசம்பர் முதல் 2027 ஏப்ரல் வரை நடைபெறவுள்ள பல்வேறு தேசியத் தேர்வுகளுக்கான புதிய அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி யுஜிசி நெட் தேர்வு டிச.14 முதல் 18 வரையும், 21ஆம் தேதியும் நடைபெற உள்ளது. ஜாயிண்ட் சிஎஸ்ஐஆர்-யுஜிசி நெட் தேர்வு டிசம்பர் 19, 22, 27 ஆகிய தேதிகளில் நடைபெறும். ஜேஇஇ மெயின் முதல் அமர்வு 2027 ஜனவரி 20 முதல் 24 வரையும், 28ஆம் தேதியும் நடைபெறும். இரண்டாம் அமர்வு ஏப்ரல் 2 முதல் 7 வரை நடைபெற உள்ளது.

மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், புதிய அட்டவணையின்படி மாற்றியமைக்கப்பட்ட தேர்வுகளும் அவற்றின் தேதிகளும் கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளன:

ராஷ்டிரிய இந்திய ராணுவக் கல்லூரி தேர்வு: 2026 டிசம்பர் 6   

ஸ்வயம் (SWAYAM) தேர்வுகள்: 2026 டிசம்பர் 8 முதல் 12 வரை  

ராஷ்டிரிய ராணுவப் பள்ளிகள் தேர்வு: 2026 டிசம்பர் 13  

யு.ஜி.சி நெட் (டிசம்பர் சுழற்சி): 2026 டிசம்பர் 14 முதல் 18 வரை மற்றும் டிசம்பர் 21  

ஜாயிண்ட் சி.எஸ்.ஐ.ஆர்- யு.ஜி.சி. நெட் (டிசம்பர் சுழற்சி): 2026 டிசம்பர் 19, 22 மற்றும் 27  

ஆர்மி கேடட்ஸ் கல்லூரி தேர்வு: 2027 ஜனவரி 4  

ஸ்ரேஷ்டா (SHRESHTA - NETS): 2027 ஜனவரி 10  

நிஃப்ட் (NIFT) நுழைவுத் தேர்வு: 2027 ஜனவரி 10  

ஜே.இ.இ. மெயின் (Session 1): 2027 ஜனவரி 20 முதல் 24 வரை மற்றும் ஜனவரி 28  

அனைத்திந்திய சைனிக் பள்ளிகள் நுழைவுத் தேர்வு: 2027 ஜனவரி 31  

சிமேட் (CMAT): 2027 பிப்ரவரி 7  

கியூட் பி.ஜி (CUET PG): 2027 மார்ச் 2 முதல் 5, மார்ச் 8 முதல் 9, மார்ச் 12, மார்ச் 15 முதல் 19, மார்ச் 24 முதல் 25 மற்றும் மார்ச் 29 முதல் 31 வரை  

ஜே.இ.இ மெயின் (Session 2): 2027 ஏப்ரல் 2 முதல் 7 வரை   

தேர்வு அட்டவணையின் முக்கிய அம்சங்கள்

புதிய அட்டவணையின்படி, கல்லூரி உதவிப் பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகைக்கான யு.ஜி.சி.நெட் மற்றும் ஜாயிண்ட் சி.எஸ்.ஐ.ஆர். யு.ஜி.சி நெட் தேர்வுகள் 2026 டிசம்பர் மாதத்திலேயே நடத்தி முடிக்கப்படவுள்ளன.

பொறியியல் படிப்புகளுக்கான முக்கிய நுழைவுத் தேர்வான ஜே.இ.இ. மெயின் முதல் கட்ட தேர்வு 2027 ஜனவரியிலும், மத்திய பல்கலைக்கழகங்களின் முதுகலை படிப்புகளுக்கான கியூட் பி.ஜி. தேர்வுகள் மார்ச் மாதத்திலும் வெவ்வேறு தேதிகளில் நடைபெறும். இதனைத் தொடர்ந்து, ஜே.இ.இ. மெயின் இரண்டாம் கட்ட தேர்வு 2027 ஏப்ரல் தொடக்கத்தில் நடைபெறவுள்ளது