×

நம் அனைவரின் உயிர் சொல்லாக உயர்ந்து நிற்கும் தமிழ்நாடு வாழ்க - உதயநிதி ஸ்டாலின்

 

தமிழ்நாடு தினத்தையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

நமது நாடு சுதந்திரம் அடைந்த போது மெட்ராஸ் பிரசிடென்ஸி என்று இருந்த நமது தமிழகம் பின்னர் மெட்ராஸ் மாகாணமாக மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பல்வேறு மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. மாநிலங்கள் பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட தினத்தை அந்தந்த மாநிலங்கள் மாநில தினமாக கொண்டாடி வருகின்றன. இதேபோல் மதராஸ் என்று அழைக்கப்பட்டு வந்த தமிழகம், 1967 ஜூலை 18ம் நாள் தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட்டது. அன்று முதல் இன்று வரை தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட தினம் தமிழ்நாடு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு தினத்தையொட்டி தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.