×

அடுத்த வாரிசு ரெடி…தனது ஸ்மார்ட் மகனுடன் நடிகர் உதயநிதி ஸ்டாலின்!!

திமுக தலைவர் ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலின், வாரிசு அரசியல் குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும், திரைத்துறையிலும் ஒரு அசத்து அசத்தினார். அவர் நடித்த முதல் படமான ஒரு கல் ஒரு கண்ணாடி படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இதனை தொடர்ந்து கதிர்வேலன் காதல் , நண்பேன்டா , கெத்து, சரவணன் இருக்க பயமேன், மனிதன், கண்ணே கலைமானே , சைக்கோ உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடந்த 2002ம் ஆண்டு கிருத்திகா என்ற கல்லூரி தோழியை காதலித்து
 

திமுக தலைவர் ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலின், வாரிசு அரசியல் குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும், திரைத்துறையிலும் ஒரு அசத்து அசத்தினார். அவர் நடித்த முதல் படமான ஒரு கல் ஒரு கண்ணாடி படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இதனை தொடர்ந்து கதிர்வேலன் காதல் , நண்பேன்டா , கெத்து, சரவணன் இருக்க பயமேன், மனிதன், கண்ணே கலைமானே , சைக்கோ உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடந்த 2002ம் ஆண்டு கிருத்திகா என்ற கல்லூரி தோழியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் உதயநிதி. இவர்களுக்கு இன்பநிதி என்ற மகனும், தன்மயா என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் மகன் இன்பநிதியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

இதனை கண்ட நெட்டிசன்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு இவ்வளவு பெரிய மகனா? என்ற அதிர்ச்சியுடன் ரிப்ளை செய்து வருகின்றனர், இன்பநிதிக்கு தற்போது 17 வயது ஆகிறது என்பது குறிப்பிடதக்கது.