×

தமிழகத்தில்தான் அதிக மருத்துவர்கள் பலி! பட்டியலோடு நிரூபித்த உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 43 மருத்துவர்கள் இறந்ததாக இந்திய மருத்துவ சங்கம் அறிவித்தது போன்ற ஒரு தகவலை உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்து வருகிறார். கொரோனாவால் மாநிலத்தில் அதிக மருத்துவர்கள் இறப்பதாக நான் கூறியபோது எகிறிய அமைச்சர் வழக்கு போடுவோம்
 

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 43 மருத்துவர்கள் இறந்ததாக இந்திய மருத்துவ சங்கம் அறிவித்தது போன்ற ஒரு தகவலை உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்து வருகிறார்.

இது தொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “கொரோனாவால் மாநிலத்தில் அதிக மருத்துவர்கள் இறப்பதாக நான் கூறியபோது எகிறிய அமைச்சர் வழக்கு போடுவோம் என மிரட்டினார். இன்று இந்திய மருத்துவ கூட்டமைப்பே தமிழகத்தில்தான் அதிக மருத்துவர்கள் பலியாகியுள்ளதாக பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த அமைப்பு சொல்வதும் பொய்யென வழக்குப் போடுவார்களா?. மருத்துவர்களின் மரணத்தையும் மறைப்பதோடு, தொற்றால் இறக்கும் முன்களப் பணியாளர்களுக்கு 50 லட்சம் நிவாரணம் எனச் சொல்லிவிட்டு 25 லட்சமாகக் குறைத்துள்ளனர். இது தான் உயிரைப்பணயம் வைத்து கொரோனா தடுப்புப்பணியில் ஈடுபடும் முன்களப் பணியாளர்களுக்கு அரசு செலுத்தும் மரியாதையா?. இடமாறுதலுக்கு இவ்வளவு, பொறுப்புக்கு அவ்வளவு என கமிஷனில் காட்டும் அக்கறையை, உயிர்காப்பவர்களின் நலனிலும் காட்ட வேண்டும். மருத்துவர், செவிலியர், துப்புரவுப் பணியாளர் என பலியானவர்களின் உண்மையான பட்டியலை வெளியிட்டு அவர்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். இதுவே கழகத்தின் எண்ணம்!” என பதிவிட்டுள்ளார்.