×

தந்தையை தொடர்ந்து மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் உதயநிதி ஸ்டாலின்!

மாநிலங்களுக்கு பாரபட்சமின்றி தடுப்பூசிகளை வழங்க ஒன்றிய அரசு முன்வர வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழக மக்கள் தொகையில் 10%அளவுக்கே தடுப்பூசிகளை தந்துள்ள ஒன்றிய அரசு, பாஜக ஆளும் குஜராத்,கர்நாடக மாநிலங்களுக்கு அவற்றின் மக்கள் தொகையில் 20%அளவுக்கு வழங்கியுள்ளது. இப்பேரிடர் நேரத்தில் அனைத்து மாநிலங்களையும் ஒன்றாக கருதி பாரபட்சமின்றி தடுப்பூசிகளை வழங்க ஒன்றிய அரசு முன்வர வேண்டும். கொரோனாவை வெல்ல தடுப்பூசியே ஆயுதம். மக்களும் தடுப்பூசியிட ஆர்வத்துடன்
 

மாநிலங்களுக்கு பாரபட்சமின்றி தடுப்பூசிகளை வழங்க ஒன்றிய அரசு முன்வர வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழக மக்கள் தொகையில் 10%அளவுக்கே தடுப்பூசிகளை தந்துள்ள ஒன்றிய அரசு, பாஜக ஆளும் குஜராத்,கர்நாடக மாநிலங்களுக்கு அவற்றின் மக்கள் தொகையில் 20%அளவுக்கு வழங்கியுள்ளது. இப்பேரிடர் நேரத்தில் அனைத்து மாநிலங்களையும் ஒன்றாக கருதி பாரபட்சமின்றி தடுப்பூசிகளை வழங்க ஒன்றிய அரசு முன்வர வேண்டும்.

கொரோனாவை வெல்ல தடுப்பூசியே ஆயுதம். மக்களும் தடுப்பூசியிட ஆர்வத்துடன் முன்வருகின்றனர். தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து கோவையில்தான் அதிகளவு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் தடுப்பூசிகளை வழங்குவதில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுவதை புள்ளிவிவரங்கள் அம்பலப்படுத்துகின்றன” எனக் குறிப்பிட்டுள்ளார்.