பொய் பிரச்சாரத்தையும், அடிமைக் கூட்டத்தின் அவதூறுகளையும் தவிடுபொடியாக்கி வெல்வோம்- உதயநிதி ஸ்டாலின்
பாசிசவாதிகளின் பொய் பிரச்சாரத்தையும், அடிமைக் கூட்டத்தின் அவதூறுகளையும் தவிடுபொடியாக்கி, வெல்வோம் 200 - படைப்போம் வரலாறு! என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “Loading 2.0 Firewallz 2026 என்ற தலைப்பில் நடைபெற்ற திமுக ஐடி விங் நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் இன்று நடைபெற்றபோது, அதில் நாம் பங்கேற்றோம். கழகத்தின் கொள்கைகளை - திராவிட மாடல் அரசின் சாதனைகளை பரப்பும் அதேவேளையில், கழகத்திற்கு எதிரான அவதூறுகளை அடித்து நொறுக்கும் பணியையும் செய்து, கழகத்தின் வாளாகவும் கேடயமாகவும் விளங்குகிறது ஐடி விங் என்பதைக் குறிப்பிட்டு, நிர்வாகிகளைப் பாராட்டினோம்.
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்கு IT Wing நிர்வாகிகள் அயராது பணியாற்றிட வேண்டும் - கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் திராவிட மாடல் ஆட்சி தொடர செய்வோம் என கேட்டுக்கொண்டோம். பாசிசவாதிகளின் பொய் பிரச்சாரத்தையும், அடிமைக் கூட்டத்தின் அவதூறுகளையும் தவிடுபொடியாக்கி, வெல்வோம் 200 - படைப்போம் வரலாறு!” எனக் குறிப்பிட்டுள்ளார்.