முதல்வருக்கு கொஞ்சமாவது சூடு, சொரணை இருந்தால்... File-ஐ Open பண்ணுங்க- உதயநிதி ஸ்டாலின்
முதலமைச்சருக்கு கொஞ்சமாவது சூடு, சொரணை இருக்கும் என நினைத்தேன் என முதலமைச்சர் விஜயை எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சென்னை பாரிமுனையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “சினிமா மாயை, கவர்ச்சியினால் திராவிட மாடல் அரசின் சாதனைகள் இளம் தலைமுறையிடம் சென்று சேரவில்லை. விபத்துபோல இந்தத் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளது. மக்கள் அவர்களை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. திமுக-வின் தயவினால் தான் இந்த ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. இதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு அடுத்த தேர்தலில் அதனை மாற்றிக் காட்ட வேண்டும். மூன்று Files வந்திருக்கிறது, ஓபன் பண்ண வச்சிடாதீங்க" என முதலமைச்சர் மிரட்டுகிறாரம். தைரியம் இருந்தால் அதை Open பண்ணுங்க. இந்த முதலமைச்சருக்கு கொஞ்சமாவது சூடு, சொரணை இருக்கும் என நினைத்தேன் ஆனால் ஒரு நாளும் File-ஐ Open பண்ண மாட்டேங்கிறார். இன்னைக்கு இந்த File-அ பத்தி Open பண்ணுவாருனு நெனச்சேன்.. வாயவே திறக்கல.. திமுக அரசு கஜானாவை காலி செஞ்சிருச்சுனு சொன்ன முதல்வருக்கு கார் வாங்க பணம் எப்படி வந்துச்சு? இந்த ஆட்சியின் அவலங்களுக்கு எதிராக அவர்களுக்கு ஆதரவு அளித்துள்ள இடதுசாரி தோழர்களே குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். மக்கள் முழுமையாக அவர்களை தேர்ந்தெடுக்கவில்லை.. நமது தலைவரின் தயவில் தான் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது
ஆட்சிக்கு வரும் முன் ஊழலை ஒழிப்போம், மாற்றம் எனக்கூறி ஆட்சிக்கு வந்தார்கள். மாற்றம் மாற்றம் எனக்கூறி வந்தவர்களால் இன்று மிகப்பெரிய ஏமாற்றம் தான் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. ஆளுங்கட்சியினரே பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இந்த ஆட்சி அமைந்த 105 நாட்களில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது விவசாயிகள்தான். விவசாயிகள் பிரச்சனையை பேசியதற்காக என்னையும் கைது செய்தார்கள். சினிமா மாயை, கவர்ச்சியினால் திராவிட மாடல் அரசின் சாதனைகள் இளம் தலைமுறையிடம் சென்று சேரவில்லை. விபத்துபோல இந்தத் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளது. மக்கள் அவர்களை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. திமுக-வின் தயவினால் தான் இந்த ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. இதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு அடுத்த தேர்தலில் அதனை மாற்றிக் காட்ட வேண்டும். தேர்தலில் நமக்கு எதிரிகள் யாரென்று தெரியாமல் சண்டை போட்டுக் கொண்டிருந்தோம். இப்போது எதிரிகள் யாரென்று தெரிந்துவிட்டது. மீண்டும் அந்த தவறை நாம் செய்ய மாட்டோம். மக்களும் அந்தத் தவறை செய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் என்றும் மக்களோடு மக்களாக இருக்கக்கூடிய இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். அதைத்தான் முத்தமிழறிஞர் கலைஞரும், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் நமக்கு கற்றுக் கொடுத்துள்ளார்கள்” என்றார்.