×

“விடுபட்டவர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்கும் பணியை விரைவில் தொடங்குவோம்“- உதயநிதி

 

வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களை மீண்டும் இணைக்க முயற்சிப்போம் என துணை முதலமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் உள்ள மொத்தமுள்ள 6.41 கோடி வாக்காளர்களில் 97,37,832 பெயர்கள் நீக்கப்பட்டு, 5.43 கோடி பேர் கொண்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், மொத்த வாக்காளர்களில் 15.18 சதவிகிதம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. இறந்த வாக்காளர்கள் 26,32,672 பேரும், முகவரி இல்லாதவர்கள் 66,44,881 பேரும், இரட்டைப்பதிவுகள் 3,39,278 பேரும் என மொத்தமாக 97,37,832 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.4

இதுதொடர்பாக கருத்து கூறியுள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “SIR பணியை ஆரம்பம் முதலே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்த்துள்ளார். கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தோம். விடுபட்ட வாக்காளர்கள் விவரம் குறித்து ஆன்லைனில் பார்த்தால்தான் தெரியும். விடுபட்டவர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்கும் பணியை விரைவில் தொடங்குவோம். 2026 தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல, தமிழ்நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல், ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும், சமூகநீதிக்கும் சமூக அநீதிக்கும் நடக்கும் தேர்தல். பாசிச சக்திகள் பழைய அடிமைகளுடன் புதுபுது அடிமைகளை தேடி கண்டுபிடிக்கின்றனர். தேர்தலில் நம்மை எதிர்க்கும் பாசிச சக்திகளை மக்கள் ஆதரவுடன் விரட்ட வேண்டும்” என்றார்.