"குத்துனது பாஜகவா இருந்தா, வலிச்சாலும் கத்தக் கூடாதுங்கிறதுதான் டெல்லி போடுற ஆர்டர்" - உதயநிதி
சென்னையில் பெரியாரின் 'குடி அரசு' இதழ் முழு தொகுப்பு நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், "தவெக ஆட்சியில் போதைப் பொருள் நடமாட்டத்தில் சென்னை தான் இந்தியாவிலேயே முதல் இடம். செஞ்சி சிறுமி வழக்கில் முதலமைச்சர் இதுவரை வாய் திறக்கவில்லை.. முதலமைச்சர் எந்த ஊருக்கு போனாலும் எந்த மாநிலத்துக்கு போனாலும் அங்க முதலில் அவர் கோவது அங்குள்ள கோயிலுக்குதான். அதன் பிறகே மற்ற வேலைகள் நடக்கும். நாம் போலி சாமியார்களைப் பார்த்திருக்கிறோம்.. ஆனால் போலி முதலமைச்சரைப் பார்த்திருக்கிறோமா..? இன்றைக்கு சிலர் நாங்களும் பெரியாரிஸ்ட், பெரியார் கொள்கை தலைவர் என்று சொல்லலாம். தற்போதைய முதல்வர் போலி பெரியாரிஸ்ட், போலி முதல்வர். எதிர்க்கட்சி தலைவர் என்பதைவிட நான் தான் ஒரு பெரியாரிஸ்ட என்பதுதான் பெருமை.
தண்ணி வரவில்லை என சொன்ன என்ன கைது பண்ணிட்டாங்க.. ஆனா நயினார் எவ்வளவு கேலவமா பேசுனாலும் கைது பண்ண மாட்டாங்க... இந்த டம்மி முதலமைச்சருக்கு அவரை பார்த்தால் மட்டும் கோபமே வராது. குத்துனது பா.ஜ.கவாக இருந்தா வலிச்சாலும் கத்தக்கூடாது என்பதுதான் அவர்களுக்கு டெல்லியில் இருந்து வந்த உத்தரவு" என்றார்.