“இப்படி ஒரு அநாகரிக டம்மி முதல்வரை தமிழ்நாடு இதுவரை கண்டதில்லை”- உதயநிதி ஸ்டாலின்
அடுத்த கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “அடுத்த கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதன் காரணமாக இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் வருகிறது. நமக்கு இடைத்தேர்தலில் கிடைக்கும் வெற்றி. இந்த ஆட்சிக்கு கிடைக்கும் வீழ்ச்சியின் தொடக்கமாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் அரிசி, பருப்பு என அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இது குறித்து கேட்டால், முதலமைச்சரிடம் பதில் இல்லை. அதனால்தான், தேவையற்ற அவதூறுகளை பேசிவருகிறார்கள். தேர்தல் வெற்றி, தோல்விகளுக்கு அப்பாற்பட்டு மக்களுடன் நிற்கும் கட்சி திமுக. வரலாற்றிலேயே முதன்முறையாக டம்மி முதலமைச்சரை பார்க்கிறேன் தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் மின்வெட்டு ஏற்படுகிறது, விலைவாசி உயர்ந்து கொண்டே இருக்கிறது; இடைத்தேர்தலில் தவெகவிற்கு பொதுமக்கள் பாடம் புகட்ட வேண்டும்” என்றார்.