“இதற்கு ஏன் 10 நாட்கள் விஜய் ஆலோசனை நடத்தினார்?”- உதயநிதி ஸ்டாலின்
பெயர் மாற்றம் செய்வதற்கு எதற்கு 10 நாட்களாக அதிகாரிகளோடு முதல்வர் ஆலோசனை நடத்தினார்..? என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
பட்ஜெட் முடிந்தவுடன் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “பெயர் மாற்றம் செய்வதற்கு எதற்கு 10 நாட்களாக அதிகாரிகளோடு முதல்வர் ஆலோசனை நடத்தினார்..? தி.மு.கவின் திட்டங்களை அவர்களின் கட்சி பெயரோடு வெற்றி வெற்றி என இணைத்து ஸ்டிக்கர் ஒட்டி இருக்கிறார்கள். எல்லா திட்டத்துக்கும் பெயர் மாற்றம் செய்ததுதான் இவர்களது மாற்றம். தவெகவின் பட்ஜெட்டிற்கு ஜீரோ மதிப்பெண். ஆனால், நிதியமைச்சருக்கு திமுகவின் நன்றி. திய திட்டங்களோ, தொலைநோக்குப் பார்வைகளோ இல்லாததால் இது ஒரு "பூஜ்ஜிய பட்ஜெட்" ஆகும். ஒவ்வொரு துறை பற்றி பேசும் போதும் தமிழகம் முன்னணி மாநிலமாக உள்ளதாக அமைச்சர் பெருமையாக சொல்கிறார். இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலமாக இருக்கிறது என பெருமையாக கூறுகின்றனா். அது திமுகவின் வெற்றி. திமுக ஆட்சியின் சாதனையை ஒப்புக்கொண்ட நிதியமைச்சருக்கு திமுக சார்பில் நன்றி” என்றார்.