×

"கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டியது தவெகவினர் கடமை"- உதயநிதி

 

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் உடல்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அஞ்சலி செலுத்தினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், “கரூர் துயர சம்பவம் ஈடு செய்ய முடியாத இழப்பு. எவ்வளவு ஆறுதல் கூறினாலும் இழப்புக்கு வார்த்தைகளால் ஆறுதல் கூற இயலாது. நெரிசலில் பல உயிர்களை இழந்திருக்கிறோம். இனிமேல் இதுபோன்ற விபத்துகள் நடக்கக்கூடாது. கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டியது தவெகவினர் கடமை. இனி இதுபோன்று நடக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்கும். தலைவர்கள் குறித்த நேரத்தில் பிரசாரத்திற்கு வர வேண்டும். மக்களை சந்திப்பது தலைவர்களின் உரிமை, ஆனால் கூட்டத்தை கட்டுப்படுத்துவது தலைவரின் பொறுப்பு. உரிய நேரத்திற்கு வருவது உள்ளிட்டவற்றை செய்திருக்க வேண்டும். நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அரசு அவர்களுக்கு துணை நிற்கும்” என்றார்.