×

உலக கோப்பை ஸ்குவாஷ் போட்டிக்கான கோப்பையை உதயநிதி அறிமுகம் செய்து வைத்தார்

 

சென்னையில் நடைபெற உள்ள 12 நாடுகள் பங்குபெறும் உலக கோப்பை ஸ்குவாஷ் போட்டிக்கான கோப்பையை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.


சென்னையில் இன்று முதல் வரும் 14 ஆம் தேதி வரை நடைபெற உள்ள ‎5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டிகளின் தொடக்க விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு போட்டிக்கான கோப்பையை அறிமுகப்படுத்தி போட்டியினை தொடங்கி வைத்தார். சென்னை ராயப்பேட்டையில் எக்ஸ்பிரஸ் அவென்யூ மால் மற்றும் நேரு பார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியில் நடைபெற உள்ள இப்போட்டிகளில் நடப்பு சாம்பியன் எகிப்து, இந்தியா, ஈரான், ஜப்பான், மலேசியா, தென்கொரியா, ஹாங்காங், சீனா, தென்ஆப்பிரிக்கா, போலந்து, சுவிட்சர்லாந்து, பிரேசில் ஆகிய 12 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்திய அணியில் டெல்லியை சேர்ந்த அனாஹத் சிங், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜோஸ்னா சின்னப்பா, அபய் சிங், வேலவன் செந்தில் குமார் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். 


இந்த போட்டிகள் உற்சாகம் தரும் வகையில் நமது சென்னையில் நடைபெறுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஒரு கடினமாக இருக்கும் என்றும் அதற்கு தங்கள் தயாராக இருப்பதாக ஜோஸ்னா சின்னப்பா தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், அனில் வாதவா, தலைவர், இந்திய ஸ்குவாஷ் ராக்கெட் சம்மேளனம் என். ராமச்சந்திரன், புரவலர், தமிழ்நாடு ஸ்குவாஷ் ராக்கெட் சங்கம் தாமஸ் ட்ரொட்சன், தலைவர், ஐரோப்பிய ஸ்குவாஷ் சம்மேளனம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி மற்றும் வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்.