×

“கோட் சூட் போட்டதெல்லாம் பிரச்னை கிடையாது... டி.ராஜேந்தர் போல ரைமிங்காக டயலாக் பேசிகிட்டு”- உதயநிதி

 

இந்தத் தோல்வி நிரந்தரமல்ல! நிச்சயம் மீண்டும் வென்று காட்டுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சென்னை இராயப்பேட்டையில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “என்றைக்கும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி, தி.மு.க.வின் கோட்டை என்பதை தொகுதி மக்கள் மீண்டும் நிரூபித்துள்ளீர்கள். என்றைக்கும் நான் உங்கள் வீட்டுப் பிள்ளையாகதான் இருப்பேன். திருவள்ளுவருக்கு மீண்டும் காவிப் பூச ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால், அதைப் பற்றி பேச வக்கில்லாமல் பயந்து இன்றைக்கு ஓரமாக நின்று வேடிக்கை பார்ப்பது யார்? த.வெ.க கவர்ச்சியில் வெற்றிபெறாமல், வேறு எதைவைத்து வெற்றிபெற்றது என இரண்டு காரணங்கள் சொல்ல முடியுமா? போராட்டம் செய்தீர்களா? சிறை சென்றிருக்கிறீர்களா? மாநில உரிமைகளுக்காக குரல் கொடுத்திருக்கிறீர்களா? மக்களையாவது உருப்படியாக சந்தித்தீர்களா? உங்களது வேட்பாளர்கள் பெயராவது உங்களுக்கு தெரியுமா? 

தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்று 25 நாட்கள் ஆகிவிட்டது. இதுவரை உருப்படியாக ஒரு திட்டத்தை இந்த அரசு கொண்டுவந்துள்ளது என சொல்ல முடியுமா? தமிழ்நாட்டில் ஏற்கனவே பணியில் இருக்கும் காவலர்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி, ‘சிங்கப்பெண் திட்டம்’ கொண்டுவரப் போகிறோம் என அறிவித்து, அதுவும் இதுவரை வரவில்லை. ஒரு கூடுதல் செலவில்லாத திட்டத்தை தொடங்கக்கூட வக்கில்லாத Sofa மாடல் ஆட்சிதான் இது. இந்தத் தோல்வி நிரந்தரமல்ல! நிச்சயம் மீண்டும் வென்று காட்டுவோம், அவர் கருப்பு கோட் போடுவது பெரியார் நினைவாக என்கிறார். கோட் சூட் போட்டதெல்லாம் பிரச்னை கிடையாது. எல்லா விதத்திலும் கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறீர்கள், அதுதான் பிரச்னை. எதைக் கேட்டாலும் திமுக செய்கின்ற சதி என்று கூறுகிறார்; இப்படிப்பட்ட முதலமைச்சரை தமிழக மக்கள் தேர்ந்தெடுத்து விட்டார்கள், அந்த முடிவை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். தூர சக்தி, ஓர சக்தி, பார சக்தி என்று திரைப்பட இயக்குநர் டி.ராஜேந்தர் போல ரைமிங்காக டயலாக் பேசுகிறார் ” என பேசினார்.