×

தமிழ்நாட்டில்  ‘ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி தொடர் 2025’ - லோகோவை வெளியிட்டு  உதயநிதி பெருமிதம்..!

 


தமிழ்நாட்டில் நடைபெறும் ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி தொடரின்  லோகோவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  வெளியிட்டார்.  

 ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி தொடர் தமிழ்நாட்டில் வருகிற நவம்பர் 28ம் தேதியிலிருந்து  டிசம்பர் 10ம் தேதி வரை நடைபெறவுள்ளது.  சென்னை மற்றும் மதுரையில் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை தொடரில் 24 சர்வதேச அணிகள் கலந்துகொள்ள உள்ளன.  இந்நிலையில்  ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி தொடரின் லோகோவை  இன்று  துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  வெளியிட்டார்.  

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “இந்த டிசம்பரில் சென்னை மற்றும் மதுரையில் மற்றொரு சர்வதேச விளையாட்டு நிகழ்வாக  ஆண்கள் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை 2025-ஐ  நடத்த தமிழ்நாடு தயாராகி வருகிறது என்பதை அறிவிப்பதில் பெருமைப்படுகிறேன்.  

நமது திராவிட மாடல் அரசாங்கத்தின் கீழ், போட்டியை வெற்றிகரமாக நடத்துவதற்கும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கும் மொத்தம் ₹65 கோடி ஒதுக்கப்பட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் ஏற்பாடுகள் குறித்து நான் ஊடகங்களுக்கு விளக்கினேன்.  முறையான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, 2025 ஜூனியர் உலகக் கோப்பை  ஹாக்கி தொடரின் லோகோ வெளியிடப்பட்டுள்ளது.  இந்த மதிப்புமிக்க போட்டியை நடத்துவதற்காக தமிழ்நாடு அரசும், ஹாக்கி இந்தியாவும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

உலகம் முழுவதிலுமிருந்து மொத்தம் 24 அணிகள் இந்த மார்க்யூ நிகழ்வில் பங்கேற்கும்.  சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளுக்கான மையமாக தமிழ்நாட்டை மாற்றுவதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் தொலைநோக்குத் தலைமைத்துவத்திற்காக  எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.ஆண்கள் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை 2025 தமிழ்நாட்டின் விளையாட்டு வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக இருக்கும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.